செய்திகள்
காய்கறிகள்

கோவை மார்க்கெட்டுகளில் காய்கறிகள் விலை உயர்வு

Published On 2021-11-20 10:27 GMT   |   Update On 2021-11-20 10:27 GMT
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிர்கள் பயிரிடப்படுகிறது.
கோவை:

கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, வெண்டை, கத்தரி உள்ளிட்டவைகளும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலைக்காய்கறிகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால் கோவை மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து சற்று குறைய தொடங்கியுள்ளது. இதனால் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும் கவலையடைந்துள்ளனர்.

தியாகி குமரன் மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

நாட்டு தக்காளி-ரூ.100, ஆப்பிள் தக்காளி- ரூ.90, புடலைங்காய்- ரூ.35, மாங்காய்- ரூ.60, எலுமிச்சை- ரூ.40, தேங்காய்- ரூ.35, கத்தரி- ரூ.80, வெண்டைக்காய்- ரூ.70, அவரை-ரூ.70, மிளகாய்-ரூ.40, பீன்ஸ்-ரூ.80, பாகற்காய்-ரூ.60, முட்டைக்கோஸ்-ரூ.60, வெள்ளரி-ரூ.20, பீட்ரூட்-ரூ.60, சவ்சவ்-ரூ.20, கேரட்-ரூ.80, பச்சை பட்டாணி-ரூ.180, சுரைக்காய்-ரூ.50, பீர்க்கங்காய்-ரூ.80, முள்ளங்கி-ரூ.50, இஞ்சி-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.40, சேனை கிழங்கு-ரூ.25, சேப்ப கிழங்கு-ரூ.30, உருளை கிழங்கு-ரூ.40, பெரிய வெங்காயம்-ரூ.40, சின்னவெங்காயம்-ரூ.30, காலிபிளவர்-ரூ.50, பூண்டு-ரூ.160க்கு விற்பனையாகி வருகிறது.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அதிகளவில் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், வாழை, தென்னை பயிர்கள் பயிரிடப்படுகிறது. விளையும் பயிர்களை பூலுவப்பட்டி, தொண்டாமுத்தூர் காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தொண்டாமுத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 14 கிலோ எடையுள்ள டிப்பர் தக்காளி நேற்று முன்தினம் 950 ரூபாய்க்கும், நேற்று 1,200 ரூபாய்க்கு விற்பனையானது.

மழை குறைந்தாலும் தக்காளி வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறையும். அதுவரை விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News