செய்திகள்
கொரோனா வைரஸ்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100 - ஐ தாண்டியது

Published On 2021-09-23 08:18 GMT   |   Update On 2021-09-23 08:18 GMT
நேற்று ஒரே நாளில் 101 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 92 ஆயிரத்து, 307 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏறி இறங்கி வருகிறது. கடந்த  10-ந்தேதி 113 பேருக்கு தொற்று உறுதியானது. ஒரு வாரமாக பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில் கடந்த 16-ந்தேதி ஒரு நாள் பாதிப்பு 110 ஆக உயர்ந்தது. நடப்பு வாரத்தில் நான்கு நாட்களாக பாதிப்பு 90க்கு அதிகமாக இருந்து வந்தது.

நேற்று மாதத்தில் 3-வது முறையாக 100ஐ தாண்டி பாதிப்பு உறுதியாகியது. நேற்று ஒரே நாளில் 101 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து இதுவரை 92 ஆயிரத்து, 307 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று  71 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதுவரை 90 ஆயிரத்து 420 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 937 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்கு 950 பேர் இறந்துள்ளனர்.

இதனிடையே மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால் மாநகராட்சி பகுதியில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோரில் பலர் இன்னும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இது போல் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வராமல் உள்ளோரை தொடர்பு கொண்டு தகவல் அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சி அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் உள்ள உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி குறித்த டெலி கவுன்சிலிங் சென்டர் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டு, 2வது தவணை செலுத்தாமல் உள்ள நபர்களின் செல்போன் எண்களை ஊழியர்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து அழைப்பு விடுக்கின்றனர். 
Tags:    

Similar News