தொழில்நுட்பம்
ஆப்பிள்

ஐபோன் சிக்கலை வாட்ச் கொண்டு சரி செய்த ஆப்பிள்

Published On 2021-02-02 11:36 GMT   |   Update On 2021-02-02 11:36 GMT
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களில் ஏற்பட்ட சிக்கலை வாட்ச் கொண்டு சரி செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


உலகில் கடந்த ஆண்டு கொரோனாவைரஸ் பாதிப்பு உச்சநிலையில் இருந்த போது, ஐபோன் பயனர்கள் முகக்கவசம் அணிந்து இருந்த போது பேஸ் ஐடி அம்சத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்சமயம் ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் புது அப்டேட் பேஸ் ஐடி அம்சத்தை ஆப்பிள் வாட்ச் அணிந்திருக்கும் போது இயக்கும் வசதியை வழங்குகிறது.

அதாவது ஆப்பிள் வாட்ச் அணிந்து இருப்பவர்கள் முகக்கவசத்துடன் தங்களின் ஐபோனை பேஸ் ஐடி கொண்டு அன்-லாக் செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது முக அங்கீகாரம் செய்யும் அம்சம் பயனர்கள் முகக்கவசம் அணிந்து இருப்பதை உணர்ந்து செயல்படும் என ஆப்பிள் தெரிவித்து உள்ளது.



இந்த அம்சத்தை பயன்படுத்த விரும்புவோர் அதனை முதலில் ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த அம்சம் செயல்படும் போது வெற்றிகரமாக அன்லாக் செய்யப்பட்டதை ஆப்பிள் வாட்ச் ஹேப்டிக் முறையில் பயனர்களுக்கு உணர்த்தும். எனினும், இந்த அம்சம் போனினை அன்லாக் செய்வதற்காகவே வழங்கப்படுகிறது. 

இதை கொண்டு ஆப் ஸ்டோர் பர்சேஸ் மேற்கொள்ள முடியாது. இந்த அம்சம் ஐஒஎஸ் 14.5 டெவலப்பர் பீட்டாவில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் டிராக்கிங் டிரான்ஸ்பேரண்சி அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News