செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 5 காசு உயர்வு

Published On 2021-11-18 07:41 GMT   |   Update On 2021-11-18 07:41 GMT
தொடர் மழையால் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை காரணமாக முட்டை உற்பத்தி குறைந்ததாலும், கார்த்திகை மாதம் அய்யப்ப சீசன் தொடங்கியதாலும் விலை உயர்ந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாகவே முட்டை விலை ஏற்ற, இறக்கமாக உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.4.55 ஆக இருந்த முட்டை விலை பின்பு ரூ.4.65 ஆகவும், தொடர்ந்து ரூ.4.70 ஆகவும் உயர்ந்தது.

கடந்த 11-ந்தேதி முட்டை விலை 15 காசுகள் குறைந்து ரூ.4.55 ஆனது. பின்னர் கடந்த 15-ந்தேதி 5 காசுகள் உயர்ந்து ரூ.4.60 ஆனது. இன்று விலை மேலும் 5 காசு அதிகரித்து ரூ.4.65 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மற்ற மண்டலங்களில் முட்டை விலை ஆமதாபாத்தில் ரூ.4.75, பெங்களூருவில் ரூ.4.70, சென்னையில் ரூ.4.90, மும்பையில் ரூ.5.09, மைசூரில் ரூ.4.65 ஆகவும் உள்ளது.

தொடர் மழையால் ஏற்பட்ட சீதோஷ்ண நிலை காரணமாக முட்டை உற்பத்தி குறைந்ததாலும், கார்த்திகை மாதம் அய்யப்ப சீசன் தொடங்கியதாலும் விலை உயர்ந்துள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News