செய்திகள்
திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை சேறும், சகதியுமாக உள்ளதை படத்தில் காணலாம்.

உடையார்பாளையம் அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலை- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2020-11-19 09:05 GMT   |   Update On 2020-11-19 09:05 GMT
உடையார்பாளையம் அருகே சேறும், சகதியுமாக சாலை மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை விரிவு படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. ஆங்காங்கே சிறுபாலமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. கட்சி பெருமாள் கிராமத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் வரை சர்வீஸ் சாலையில் கிராவல் மண், ஜல்லி கற்க்களை கொட்டி உயரப்படுத்தும் பணியும் நடக்கிறது. இந்த பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது.

தற்போது மழைபெய்து வருவதால், இந்த சாலையில் மண் சூழ்ந்து சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் கனரக வாகனங்களில் உதிரிபாகங்கள் கழன்று விழுந்து, வாகனங்கள் பழுது அடைந்துநிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கட்சி பெருமாள் கிராமத்தை கடந்து செல்வது பெரும் சவாலாக உள்ளது.

இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே ஆமை வேகத்தில் நடை பெறும் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News