செய்திகள்
கோப்புப்படம்

சூரியனை சுற்றிய வட்டத்தால் ஆபத்தா? அறிவியல் கழகம் விளக்கம்

Published On 2021-06-24 07:46 GMT   |   Update On 2021-06-24 07:46 GMT
உடுமலையில் நேற்று சூரியனை சுற்றி ஒரு கருவளையம் போன்ற ஒளிவட்டம் தெரிந்தது. இதனை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
உடுமலை:

சூரியனை சுற்றிய வட்டம் கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் அபசகுணம் என ஒரு சிலர் வதந்தி பரப்பினர். உலகை இருள் சூழ்ந்து விட்டதையே இந்த ஒளிவட்டம் தெரிவிப்பதாக கிராமப்புறத்தில் வசிக்கும் சிலர் ஆட்சேபிக்கும் வகையிலான கருத்துக்களை கூறினர். ஆனால் இது ஒரு அறிவியல் நிகழ்வு என்றும் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கலிலியோ அறிவியல் கழகம் தெரிவித்தது. 

இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரான கண்ணபிரான் கூறுகையில்:

ஹாலோஸ்’ என்று அழைக்கப்படும் ஒரு வெள்ளை வளையம், சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றி காணப்படுகிறது. சில நேரங்களில் ஒரு வானவில்லாக காணப்படும்.மிக உயரமான சிரஸ் மேகங்கள் பெரும்பாலும் பனி படிகங்களால் ஆனவை. இவை 20 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும்.

அவற்றில் சூரிய ஒளிபடும் போது, ஒரு முப்பட்டகம் போலவே பிரதிபலித்து ஒளிவீசும். பிரதிபலிப்பு மற்றும் சிதறல் ஆகியவற்றால் சூரிய ஒளிவட்டம் ஏற்படுகிறது.ஒளிவட்டத்தை சுற்றியுள்ள வானம் மற்ற வானங்களை விட இருண்டதாக இருக்கும். இது போன்ற நிகழ்வு சாதாரணமாக நடக்கும். வெறும் கண்ணால் நீண்ட நேரம் பார்க்கக்கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News