செய்திகள்

கஜா புயல் நிவாரணம் கேட்டு கோழி பண்ணை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-02-13 13:33 GMT   |   Update On 2019-02-13 13:33 GMT
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு கஜா புயல் நிவாரணம் கேட்டு கோழி பண்ணை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்கத்தினர் கஜா புயலால் சேதமான கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் கேட்டு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒப்பந்த கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் நலச்சங்க மண்டலத்தலைவர் பூபாலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வீசிய கஜா புயலில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 210 கோழிப்பண்ணைகள் சேதமடைந்தன.

இந்த கோழிப் பண்ணைகளுக்கு உரிய நிவாரணம் கேட்டு பலமுறை அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலின் போது விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் சேதமான 1200 கோழிப்பண்ணைகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.

ஆனால் டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்னும் 10 நாட்களுக்குள் நிவாரணம் வழங்கவில்லை எனில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News