தொழில்நுட்பம்
மோட்டோரோலா

இரு ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் மோட்டோரோலா

Published On 2021-04-15 10:36 GMT   |   Update On 2021-04-15 10:36 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.


மோட்டோரோலா நிறுவனம் இரண்டு ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்கள் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021, மோட்டோ ஜி பவர் 2021 அல்லது மோட்டோ ஜி பிளே 2021 மாடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டை மோட்டோரோலா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது. மோட்டோ ஜி சீரிஸ் மாடல்கள் தவிர இரு ஸ்மார்ட்போன்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. விரைவில் இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.



முன்னதாக மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2021, மோட்டோ ஜி பவர் 2021 மற்றும் மோட்டோ ஜி பிளே 2021 மாடல்கள் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. மோட்டோ ஜி ஸ்டைல் 2021 மாடலில் குவாட் கேமரா சென்சார்கள், ஸ்னாப்டிராகன் 678 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

மோட்டோ ஜி பவர் 2021 மாடலில் மூன்று பிரைமரி கேமராக்கள், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது. மோட்டோ ஜி பிளே 2021 மாடல் டூயல் கேமரா சென்சார் மற்றும் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News