ஆட்டோமொபைல்

ஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் டீசர் வெளியானது

Published On 2018-02-14 11:34 GMT   |   Update On 2018-02-14 11:34 GMT
ஹூன்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கோனா எலெக்ட்ரிக் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

ஹூன்டாய் நிறுவனத்தின் கோனா காம்பேக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் எலெக்ட்ரிக் பதிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. பிப்ரவரி 27-ம் தேதி வெளியிடப்பட இருக்கும் நிலையில், ஹூன்டாய் கோனா எலெக்ட்ரிக் அந்நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 

கோனா எலெக்ட்ரிக் 470 மற்றும் 500 கிலோமீட்டர் என இருவித திறன்களில் வெளியிடப்பட இருக்கிறது. இது குறித்து முழு விவரங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மோட்டார் விழாவில் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் ஹூன்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களுடன் பாதுகாப்பு மற்றும் டிரைவிங் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கென ஹூன்டாய் நிறுவனம் எல்ஜியுடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய எலெக்ட்ரிக் பேட்டரி செவி போல்ட் மாசலில் வழங்கப்பட்டதை போன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கும் போது 40 கிலோவாட் மற்றும் 64 கிலோவாட் பேட்டரி பேக்களை கொண்டிருக்கும்.

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யு.வி. அமெரிக்காவில் அடுத்த மாதம் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார், முன்பக்க வீல்-டிரைவ் (FWD) மற்றும் பின்புற வீல்-டிரைவ் (RWD) ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இதன் 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 179 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. 

இதன் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் மோட்டார் 175 பி.ஹெச்.பி. பவர், 265 என்.எம். டார்கியூ மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் 118 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News