வழிபாடு
ஈரோடு பெரியவலசு லால்பகதூர் நகர் விளையாட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

ஈரோடு பெரியவலசு லால்பகதூர் நகர் விளையாட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

Published On 2022-01-06 05:57 GMT   |   Update On 2022-01-06 05:57 GMT
ஈரோடு பெரியவலசு லால்பகதூர் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மாதம் 28-ந்தேதி கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
ஈரோடு பெரிய வலசு லால்பகதூர் நகரில் பிரசித்தி பெற்ற விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மாதம் 28-ந்தேதி கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அன்று இரவு 9 மணிக்கு பூச்சாட்டப்பட்டு கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. 30-ந்தேதி இரவு 7 மணிக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 4-ந்தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

நேற்று காலை 6 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு வந்தனர். பின்னர் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி விளையாட்டு மாரியம்மன் மணப்பெண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News