செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

கொரோனா பரவல் எதிரொலி- சுப்ரீம் கோர்ட்டுக்கு 10-ந் தேதி முதல் விடுமுறை

Published On 2021-05-02 01:52 GMT   |   Update On 2021-05-02 01:52 GMT
சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறையை ஒரு வாரத்துக்கு முன்னரே அறிவித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

டெல்லியில் நிலவும் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு முன்னரே விடுமுறை அளிக்க வேண்டும் என வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறையை ஒரு வாரத்துக்கு முன்னரே அறிவித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மே 10-ந் தேதி முதல் ஜூன் 27-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் ஜூன் 28-ந் தேதி செயல்பட தொடங்கும்.



இதுபோல, சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 13-ந் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் அட்டவணைப்படி, மே 14 தொடங்கி ஜூன் 30-ந் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News