ஆன்மிகம்
அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகத்தின் சிறப்பு

Published On 2019-11-05 09:03 GMT   |   Update On 2019-11-05 09:03 GMT
சிவன் - அபிஷேகப் பிரியர். சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
சிவன் - அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்கு, தூய நீர், பசும்பால், இளநீர், கருப்பஞ்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள், அன்னம் உள்ளிட்ட பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். இவற்றுள் மிகச் சிறப்பானது அன்னாபிஷேகம்.

அன்னத்தை ‘பிராணன்’ என்றும், ‘அஹமன்னம்’ எனவும் வேதங்கள் போற்றுகின்றன. ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதைப் பொறுத்தே அவனது மனம் இருக்கும் என்கின்றன உபநிடதங்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்கக்கூடாது என்பதை உணர்த்தவும், அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவுமே அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
Tags:    

Similar News