செய்திகள்
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பள்ளிகள் மூடல்

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: தானே மாவட்டத்தில் பள்ளிகள் மூடல்

Published On 2021-02-24 01:48 GMT   |   Update On 2021-02-24 01:48 GMT
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தானே மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
தானே :

தானே மாவட்டத்தின் கிராமப்புறங்களில் அண்மையில் 5 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேக்கர் 10 மற்றும் 12-ம் வகுப்புகளை தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இது அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை நடைமுறையில் இருக்கும். இருப்பினும், பாடங்கள் ஆன்லைனில் நடத்தப்படுவது தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

இதுபற்றி மாவட்ட பொறுப்பு மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக தானே மாவட்டத்தில் உடனடியாக ஊடரங்கு விதிக்கப்படாது எனவும், இது தொடர்பான எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நோயை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதனால் மாவட்டத்தில் ஊரடங்கை தவிர்க்க முடியும் என்றும் மந்திரி கூறினார்.
Tags:    

Similar News