தொழில்நுட்பம்
புஜாக்கு

உலகின் அதிவேக கம்ப்யூட்டரான புஜாக்கு

Published On 2020-06-23 11:11 GMT   |   Update On 2020-06-23 11:11 GMT
உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை ஜப்பான் நாட்டின் புஜாக்கு என்ற சூப்பர்கம்ப்யூட்டர் பெற்றுள்ளது.



ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட புஜாக்கு எனும் சூப்பர்கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கம்ப்யூட்டர் என்ற பெருமையை பெற்றது. இதனை புஜிட்சு மற்றும் ஜப்பான் நாட்டின் ரிகென் ஆய்வு மையம் இணைந்து உருவாக்கியுள்ளன.

உலக சந்தையில் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் ஜப்பான் நாட்டு சூப்பர்கம்ப்யூட்டர் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் அதிவேக சூப்பர்கம்ப்யூட்டர் போட்டியில் முன்னணி வகித்து வந்தன.

மேலும் உலகின் அதிவேக கம்ப்யூட்டரில் ஏஆர்எம் சார்ந்த பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருப்பதும் இதுவே முதல் முறை ஆகும். சூப்பர்கம்ப்யூட்டர்களுக்கு நடத்தப்படும் வழக்கமான சோதனைகளில் புஜாக்கு முன்னணி புள்ளிகளை பெற்று இருக்கிறது. 

வழக்கமாக சூப்பர்கம்ப்யூட்டர்கள் குவாண்டம் மெக்கானிக்ஸ், வானிலை நிலவரங்களை கணிப்பது, வான்வெளி ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
Tags:    

Similar News