செய்திகள்
கோப்புபடம்

வெள்ளத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? - தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம்

Published On 2021-09-17 05:59 GMT   |   Update On 2021-09-17 05:59 GMT
இடி, மின்னலின் போது மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
அவிநாசி:

அவிநாசி வருவாய்த்துறை சார்பில் பேரிடர் சமயத்தில் உயிர், உடமைகளை தற்காத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு செய்முறை விளக்க பயிற்சி அவிநாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.  

தாசில்தார் ராகவி தலைமை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் (கூடுதல் பொறுப்பு) பேபி மத்தையா முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர்.
 
மேலும் மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்து கொள்ளும் போது வீடுகளில் உள்ள தண்ணீர் கேன், ரப்பர் குழாய்களை இடுப்பில் கட்டிக்கொண்டு நீந்தி வெளியேறி விட முடியும். இடி, மின்னலின் போது மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News