தொழில்நுட்பம்

கூகுள் பிக்சல் 4 அதிகாரப்பூர்வ டீசர் வெளியீடு

Published On 2019-06-13 05:08 GMT   |   Update On 2019-06-13 05:08 GMT
கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.



கூகுள் பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போனின் டீசர் வெளியாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்சமயம் அதிகாரப்பூர்வ டீசர் ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை உறுதிப்படுத்தி இருக்கிறது. அதன்படி பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் பின்புறம் சதுரங்க வடிவில் கேமரா பம்ப் காணப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் கூடுதல் லென்ஸ்களை வழங்கும் பாணியை தவிர்த்து வந்த கூகுள் தற்சமயம் பிக்சல் 4 சாதனத்தில் மாற்றிக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. டீசரின் படி கூகுள் தனது புதிய ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் இரண்டு லென்ஸ்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்துடன் எல்.இ.டி. ஃபிளாஷ் யூனிட் ஒன்றும் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், கேமரா ரெசல்யூஷன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இது டெலிபோட்டோ லென்ஸ் அல்லது அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்களி்ல் எதுவாக இருக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது. 



முன்னதாக இதேபோன்ற சதுரங்க கேமரா பம்ப் கொண்ட வடிவமைப்பு ஐபோன் XI மாடலில் வழங்கப்படலாம் என்ற வாக்கில் இணையத்தில் தகவல்கள் வெளியாகின.

வடிவமைப்பை பொருத்தவரை கூகுள் டு-டோன் பேக் ஃபினிஷிற்கு மாற்றாக புதிதாக ஆல்-கிளாஸ் பேக் வடிவமைப்பை வழங்கலாம் என தெரிகிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் காணப்படவில்லை. இதனால் பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.

ஸ்மார்ட்போனின் முன்புறம் நாட்ச் வடிவமைப்பை நீக்கி கேலக்ஸி எஸ்10 பிளஸ் போன்று பன்ச் ஹோல் கேமரா வழங்கலாம் என்றும் முன்புறமும் இரட்டை செல்ஃபி கேமராக்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் கொண்டிருக்கும்.

எனினும், இதன் ரேம் மற்றும் மெமரி அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. புதிய ஸ்மார்ட்போன் வெளியாகும் போது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Tags:    

Similar News