லைஃப்ஸ்டைல்
வீட்டிலேயே செய்யலாம் ரிச் சாக்லேட் கேக்

வீட்டிலேயே செய்யலாம் ரிச் சாக்லேட் கேக்

Published On 2020-10-10 09:40 GMT   |   Update On 2020-10-10 09:40 GMT
குழந்தைகளுக்கு சாக்லேட் கேக் என்றால் மிகவும் பிடிக்கும். கடையில் கிடைக்கும் ரிச் சாக்லேட் கேக்கை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்
கோக்கோ பவுடர் - 2/3 கப்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி
உப்பு - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய், அடித்தது - 3/4 கப் 
பொடித்த சர்க்கரை -  1 3/4 கப்
வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - 2 தேக்கரண்டி
பெரிய முட்டை - 1
சூடான நீர் - 1 கப்

செய்முறை:

மாவு, கோக்கோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போடவும்.

வெண்ணெயை நன்கு அடித்து, சர்க்கரை, வெணிலா எக்ஸ்ட்ராக் ஆகியவற்றை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, கிரீம் பதத்திற்கு வரும் வரை நன்கு கலக்கவும்.
அடுத்து அதில் முட்டையைச் சேர்த்து, மீண்டும் அடித்து கலக்கவும்.

மாவு கலவையை மெதுவாக சேர்த்து, தொடர்ந்து அடித்துக் கலக்கவும், தேவையான பதம் கிடைக்க அவ்வப்போது சுடுநீரைச் சேர்க்கவும். தனித்தனி பாத்திரத்தில் பரப்பி வைக்கவும்.

சுமார் 25 முதல் 35 நிமிடங்களுக்கு அல்லது மரக்குச்சியை நுழைத்து எடுக்கும்போது, ஒட்டாமல் வரும் வரைக்கும் பேக் செய்யவும். 15 நிமிடங்களுக்கு குளிர வைக்கவும்.

முழுமையாக ஆறிய பிறகுதான் ரிச் சாக்லெட் கேக் சரியான பதத்தில் இருக்கும்.

ஆறிவிட்டதை உறுதி செய்வதற்காக திருப்பி வைத்து சிறிது நேரம் வைத்திருக்கவும். இதோ யம்மியான கேக் தயார்.

குறிப்பு: க்ரீம் பதம் வரும் வரை நன்கு கலக்க மறக்க வேண்டாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News