உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

குமரியில் சார்பதிவக எல்லைகள் மாற்றி அமைப்பு

Published On 2022-05-06 07:05 GMT   |   Update On 2022-05-06 07:05 GMT
கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பதிவு மாவட்டம் என பிரிப்பு குமரியில் சார்பதிவக எல்லைகள் மாற்றி அமைப்பு : 13-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம்
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின்படியும், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரிலும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் எளிதாக பட்டா மாற்றம் செய்வதற்கும், பொதுமக்களின் வசதிக்காக ஒரே வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் அந்த வருவாய் மாவட்டத்திலேயே உள்ள பதிவு மாவட்டத்தில் இணைப்பதற்கும், ஒரே வருவாய் வட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலேயே இணைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி பதிவு மாவட்டம் மற்றும் மார்த்தாண்டம் பதிவு மாவட்டம் என இரண்டு பதிவு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மார்த் தாண்டம் பதிவு மாவட்டத்தை உள்ளடக்கி விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய வருவாய் வட்டங்களில் உள்ள வருவாய் கிராமங்களை கொண்டு சார்பதிவகங்களின் எல்லைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி பதிவு மாவட்டத்தை உள்ளடக்கி பள்ளியாடி சார்பதிவகத்தில் கல்குளம் மற்றும் விளவங்கோடு வருவாய் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்கள் அமைந் துள்ளன. மேலும் கன்னியா குமரி பதிவு மாவட்டத்தை உள்ளடக்கிய இறச்சகுளம், நாவல்காடு, திருப்பதிசாரம் ஆகிய 3 கிராமங்களை தோவாளை சார்பதிவகத்துடன் இணைக்க உத்தேசிக்கப்பட் டுள்ளது. எனவே சார்பதிவக எல்லைகளை மறுவரையரை செய்ய உத் தேசிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விதிமுறையின் படி ஒரு சார்பதிவகத்தின் கீழ் ஒரு வருவாய் வட்டம் மற்றும் அந்த வருவாய் வட்டத்தின் வருவாய் கிராமங்களை மட்டுேம அந்தந்த சார்பதி வகத்தில் சேர்க்க முடியும் என்பதன் அடிப்படையில் கீழ்கண்டவாறு வருவாய் கிராமங்களை இணைக்க உத்தேசிக்கப்பட்டு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரி பதிவு மாவட்டத்துக்குட்பட்ட தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட இறச்சக்குளம், நாவல்காடு, திருப்பதிசாரம் ஆகியவை வடசேரி சார்பதிவகத்தில் இருந்து மாற்றி தோவாளை சார்பதி வகத்தில் இணைக்க உத்தே சிக்கப்பட்டுள்ளது.

தற்போது கன்னியாகுமரி பதிவு மாவட்டத்தில் பள்ளியாடி சார்பதிவகத் தின் கீழ் உள்ள விளவங்கோடு தாலுகாவுக்குட்பட்ட உண்ணாமலைக்கடை வருவாய் கிராம பகுதி, மார்த்தாண்டம் பதிவு மாவட்டம் எண்.1, இணை சார்பதிவகத்துடன் இணைக்க உத்தேசிக்கப்பட் டுள்ளது. 

இதேபோல் தற்போது கன்னியாகுமரி பதிவு மாவட்டத்தின் கீழ் உள்ள பள்ளியாடி சார்பதி வகத்தில் செயல்படும் விளவங்கோடு தாலுகாவுக் குட்பட்ட நட்டாலம் ஏ, நட்டாலம் பி, கொல்லஞ்சி வருவாய் கிராம பகுதிகள் மார்த்தாண்டம் பதிவு மாவட்டம் எண் 2 இணை சார்பதிவகத்தின் கீழ் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்டவாறு கன்னியாகுமரி வருவாய் மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி பதிவு மாவட்டம் மற்றும் மார்த்தாண்டம் பதிவு மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பை செயல்படுத்த வேண்டுமா? என்பது குறித்த பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டமானது கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 13.5.2022 அன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. 

எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாது இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பதிவு மாவட்டங்கள் சீரமைப்பு குறித்த தங்களது கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News