உள்ளூர் செய்திகள்
முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்த

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-01-11 09:49 GMT   |   Update On 2022-01-11 09:49 GMT
புதுக்கோட்டையில் வயதான இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுபபூசி செலுத்தும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை கூடுதல் தவணை கோவிட் தடுப்பூசி திட்டத்தை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்  கவிதா ராமு தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 7,638 சுகாதாரப் பணியாளர்களும், 3,015 களப்பணியாளர்களும், 60 வயதிற்கு மேற்பட்ட 2,45,837 நபர்கள் இரண்டு தவணைகளும் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இதில் டாக்டர் வை.முத்துராஜா எம்.எல்.ஏ., முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் நைனாமுக
Tags:    

Similar News