செய்திகள்
சுற்றி திரியும் தெரு நாய்களை படத்தில் காணலாம்.

தருமபுரி நகரில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Published On 2020-01-13 14:37 GMT   |   Update On 2020-01-13 14:37 GMT
தருமபுரி நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் இவைகளை பிடிக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி:

தர்மபுரி நகரில் தற்போது நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக பி.ஆர். சுந்தரம் தெரு, முஹம்மது அலி கிளப்ரோடு, ஆறுமுகம் ஆசாரி தெரு, பென்னாகரம் மெயின் ரோடு நகர் மற்றும் புறநகர் பேருந்து நிலையங்களில் சுற்றுகின்றன. காலை மற்றும் இரவு நேரங்களில் தனியாக நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடிய சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை இந்த நாய்கள் துரத்தி செல்கின்றன. 

சில சமயங்களில் கடித்து விடுகின்றன. இந்த நாய்கள் நகராட்சி குப்பைவண்டி பின்னே கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. அந்த குப்பை வண்டியில் வரக்கூடிய கழிவுகள் மற்றும் அழுகிய கறிகளை நாய்கள் உண்கின்றன. அப்படி உண்ணக்கூடிய நாய்கள் பொதுமக்களை கடித்தால் தொற்றுநோய் பரவி பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, இவற்றை தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
Tags:    

Similar News