செய்திகள்
டேவிட் வார்னர்

2-வது டெஸ்ட்டில் டேவிட் வார்னர், சீன் அபோட் விளையாட மாட்டார்கள்- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

Published On 2020-12-23 09:42 GMT   |   Update On 2020-12-23 09:42 GMT
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர், சீன் அபோட் விளையாட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி (பாக்சிங்டே டெஸ்ட்) வருகிற 26-ந் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஒருநாள் போட்டி தொடரின் போது காயம் அடைந்தார். இதையடுத்து அவர் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை. அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் 2-வது டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சீன்அபோட் ஆகியோர் அணியில்இடம் பெற மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளது.

டேவிட் வார்னர் இன்னும் காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியை எட்டாததால் அணியில் இடம்பெற வில்லை.

இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியதாவது:-

டேவிட் வார்னர் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணம் அடைய வில்லை. இதனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பெற மாட்டார். பயிற்சி ஆட்டத்தில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அபோட் குணம் அடைந்து உள்ளார்.

அவரது பெயர் 2-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பலிசீலிக்கப்பட்டது. ஆனால் சிட்னியில் இருந்து மெல்போர்னுக்கு வரும் அவர் கொரோனா நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டியது இருப்பதால் அவரும் அணியில் இடம்பெற வில்லை என்று தெரிவித்துள்ளது.

எனவே முதல் டெஸ்ட்டில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியே 2-வது போட்டியிலும் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News