ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை

Published On 2020-12-31 05:18 GMT   |   Update On 2020-12-31 05:18 GMT
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், தொடர்ந்து மற்றகால பூஜைகளும் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும், மற்றகால பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும்.

இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) கோவில் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News