செய்திகள்
வாக்களிக்க வரிசையில் நிற்கும் வாக்காளர்கள்

மேற்கு வங்காள தேர்தல்... 5 மணி வரை 69.40 சதவீத வாக்குப்பதிவு

Published On 2021-04-17 11:36 GMT   |   Update On 2021-04-17 11:36 GMT
மேற்கு வங்காளத்தில் இன்று நடைபெறும் 5ம் கட்ட தேர்தலில் 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கொல்கத்தா:

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றுவருகிறது.

டார்ஜிலிங், நாடியா, கலிம்போங், கிழக்கு பர்தமான் ஜல்பாய்குரி மற்றும் வடக்கு 24 பா்கானாக்கள் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உட்பட்ட 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 39 பெண்கள் உள்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவருகின்றனர். மாலை 5  மணி நிலவரப்படி 69.40 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. அப்போது வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு அனைவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். 
Tags:    

Similar News