இந்தியா
உத்தவ் தாக்கரே

பாஜகவுடன் கூட்டணி வைத்து சிவசேனா 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது: உத்தவ் தாக்கரே

Published On 2022-01-24 04:08 GMT   |   Update On 2022-01-24 04:08 GMT
பா.ஜனதாவின் இந்துத்வா என்பது வெறும் சந்தர்ப்பவாத இந்துத்துவா. அதை அதிகாரத்தை கைப்பற்ற பட்டுமே பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை :

மராட்டியத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேல் கூட்டணியில் இருந்த பா.ஜனதாவும், சிவசேனாவும், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலையும் கூட்டணி வைத்தே சந்தித்தன. ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் இந்த கூட்டணி முறிந்தது.

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இந்தநிலையில் நேற்று சிவசேனா கட்சியின் நிறுவனரும், மறைந்த தலைவருமான பால் தாக்கரேயின் 96-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டதாக நான் நம்புகிறேன்.

பா.ஜனதாவின் இந்துத்வா என்பது வெறும் சந்தர்ப்பவாத இந்துத்துவா. அதை அதிகாரத்தை கைப்பற்ற பட்டுமே பயன்படுத்துகிறது.

சிவசேனா கட்சி பா.ஜனதாவை தான் கட்சியை விட்டு வெளியேற்றி உள்ளது, இந்துத்வாவை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News