வழிபாடு
தேரில் எழுந்தருளிய பிரியாவிடையுடள் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் தேரோட்டம்: திரளானோர் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2022-03-01 06:17 GMT   |   Update On 2022-03-01 06:17 GMT
10 நாள் திருவிழாவில் (நாளை) மாசி அமாவாசையை முன்னிட்டு (மாசி திங்கள் மறைநிலா) காலை 9.10 மணிக்கு சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் வீதி உலா வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் காசிக்கு நிகராக கருதப்படுகிறது. வருகை தருகிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி வழிபடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக நாள்தோறும நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டப்படுவது வழக்கம்

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொங்கியது. விழா தொடங்கிய நாள் முதல் காலை, மாலையில் ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நிகழ்ச்சியின் 9-வது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து ஸ்படிக பூஜையும், கால பூஜைகளும் நடைபெற்றது.

தொடர்ந்து ராமநாத சுவாமி பிரியா விடையுடனும் -பர்வதவர்த்தினி அம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி கீழ ரத வீதியில் உள்ள அமைக்கப்பட்டிருந்த மரத்தேருக்கு வருகை தந்தனர்.

அங்கு கோயில் மூத்த குருக்களால் சிறப்பு பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி பிரியா விடையுடன் பெரிய தேரிலும், பர்வத வர்த்தினி அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் சிவகோ‌ஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் நான்கு ரத வீதிகளல் உலா வந்தது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். பிற்பகல் தேர் நிலையை வந்தடைந்தது. இன்று இரவு 9 மணிக்கு மேல் தங்க ரி‌ஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது.

10 நாள் திருவிழாவில் (நாளை) மாசி அமாவாசையை முன்னிட்டு (மாசி திங்கள் மறைநிலா) காலை 9.10 மணிக்கு சுவாமி-அம்பாள் இந்திர வாகனத்தில் வீதி உலா வருகின்றனர். பிற்பகல் ரி‌ஷப வாகனத்தில் எழுந்தருளி அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளுகிறார்கள். நாளை மறுநாள் (3-ந் தேதி விழாவில் இரவு 7 மணிக்கு பிச்சாடனர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.
Tags:    

Similar News