செய்திகள்
டிராக்டர் பேரணியில் வன்முறை

டிராக்டர் பேரணியில் வன்முறை எதிரொலி - 500க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

Published On 2021-01-27 17:02 GMT   |   Update On 2021-01-27 17:02 GMT
டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனம் 500 கணக்குகளை சஸ்பெண்ட் செய்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நேற்று டிராக்டர் பேரணி நடத்தினர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்புகை குண்டுகளை பயன்படுத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். தடுத்த போலீசார் மீது விவசாயிகள் சிலர் வாளால் வெட்டியதாகவும், கொடி கட்டிய கம்பால் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக டில்லி போர்களம் போல் காட்சியளித்தது.

நேற்று நடந்த வன்முறை சம்பவங்களில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 22 வழக்குகளை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 200 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறையை அடுத்து விதிகளை மீறியதாக 500-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News