தொழில்நுட்பம்

மலிவு விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-05-17 05:15 GMT   |   Update On 2019-05-17 05:15 GMT
ஹாங்காங்கை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் டூயல் கேமரா சென்சார் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
 


ஐடெல் நிறுவனம் இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியானது. இதனை உண்மையாக்கும் வகையில் ஐடெல் ஏ46 என்ற ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

புதிய ஐடெல் ஏ46 ஸ்மார்ட்போனில் 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர், 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

புகைப்படங்களை எடுக்க ஏ46 ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. பிரைமரி கேமரா, வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா, 5 எம்.பி. செல்ஃபி கேமரா, சாஃப்ட் ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் ஐடெல் ஏ46 ஸ்மார்ட்போன் 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் மற்றும் பின்புற கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



ஐடெல் ஏ46 சிறப்பம்சங்கள்:

- 5.45 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1280x720 பிக்சல் TFT IPS டிஸ்ப்ளே
- 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் யுனிசாக் SC9863 பிராசஸர்
- IMG8322 GPU
- 2 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- டூயல் சிம் ஸ்லாட்
- 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா
- 5 எம்.பி. செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 2400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஐடெல் ஏ46 ஸ்மார்ட்போன் டார்க் வாட்டர், கிரேடியேஷன் டைமண்ட் கிரே, ஃபியெரி ரெட் மற்றும் நியான் வாட்டர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ.4,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 50 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இத்துடன் ரூ.198 மற்றும் ரூ.299 சலுகைகளை தேர்வு செய்வோருக்கு ரூ.1200 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதுதவிர 100 நாட்கள் ரீபிளேஸ்மென்ட் வசதியும் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News