செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

Published On 2021-09-13 07:48 GMT   |   Update On 2021-09-13 07:48 GMT
விண்ணப்பிக்க ரூ.50ஐ கட்டணமாக செலுத்தி இன்று முதல்15-ந்தேதி வரையில் காலை11 முதல் 4 மணி வரையில் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
திருப்பூர்;

திருப்பூர் சிக்கண்ணாஅரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 3 கட்டங்களாக ஆகஸ்ட் 25-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்றது.

இதில் கணிதம் (42), கணினி அறிவியல் ஷிப்ட் 1 (4), ஷிப்ட் 2 (25), கணினி பயன்பாட்டியல் (7), வேதியியல் (1), இயற்பியல் (6), விலங்கியல் (11) ஆகிய வகுப்புகளுக்கான இடங்கள் காலியாக உள்ளன. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர்களிடம் இருந்து நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இதில் விண்ணப்பிக்க ரூ.50ஐ கட்டணமாக செலுத்தி இன்று முதல்15-ந்தேதி வரையில் காலை11 முதல் 4 மணி வரையில் கல்லூரி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். 

மேலும்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 16,17-ந்தேதிகளில் காலை11 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதில் விண்ணப்பித்த அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 4-வது கட்ட கலந்தாய்வு 20-ந்தேதி நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் பிளஸ்-1, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் ஆகியவற்றின் 2 நகல்களையும், அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும்.

மேலும் கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணம், 6 பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News