செய்திகள்
டெங்கு காய்ச்சல்

கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை

Published On 2019-09-20 09:41 GMT   |   Update On 2019-09-20 09:41 GMT
கோவை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
கோவை:

கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங் கட்டுமான பணிகள் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் 11 ஆயிரம் சதுர மீட்டரில் 1,990 இருசக்கர வாகனங்கள், 979 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 4 தளங்களுடன் கூடிய மல்டி லெவல் பார்க்கிங் கட்ட ரூ.69.80 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது.

ஆனால், திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்தினர் தயங்கினர். இதை தொடர்ந்து, மல்டிலெவல் பார்க்கிங் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகத்தினரே கட்டி பராமரிப்புக்காக தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல்கட்டமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் மல்டிலெவல் பார்க்கிங் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சியால் கட்டப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக இதில் 370 கார்கள் நிறுத்தப்படும். 4 அடுக்கு கொண்டதாக இந்த மல்டிலெவல் பார்க்கிங் அமைக்கப்படும். அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

கோவை மாநகராட்சியின் கீழ் கிழக்கு, மேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. மாநகர் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் சாலைகள், சாக்கடைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

இதனால் அந்த இடங்களில் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதில் மண்டல அளவிலான அலுவலர்கள் சுகாதார துறை அலுவலர்களுடன் இணைந்து மழை காலத்தில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாவதை கண்டறிந்து தடுப்பு மருந்துகள் தெளிப்பது மூலமாக கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, விடுதிகள், திரையரங்குகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News