செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

டிஜிட்டல் முறையில் காவலர் உடல் தகுதி தேர்வு- கவர்னர் ஒப்புதல்

Published On 2020-11-22 02:17 GMT   |   Update On 2020-11-22 02:17 GMT
புதுவையில் காவலர் உடல் தகுதித் தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்த கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவையில் காவலர் உடல் தகுதித் தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்த கவர்னர்  கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த 15-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை புதுச்சேரி அரசு பணிகளின் ஒப்புதலுக்காக கவர்னர் மாளிகைக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் பல்வேறு துறைகளை சேர்ந்த 32 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். அரசு சார்பில் காவலர் உடல்தகுதி தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கு, ஒரு நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் விட அனுமதி கோரிய கோப்புக்கும் கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்துக்கு ரூ.42 லட்சத்து 74 ஆயிரத்திற்கும், மகளிர் ஆணைய ஊழியர்களின் சம்பளம் வழங்க ரூ.13 லட்சத்து 54 ஆயிரத்திற்கும், திறன் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1 கோடியே 82 லட்சம் நிதி உள்ளிட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் விடுமுறை கால உணவுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த நிர்வாக ஒப்புதல் அளித்தும், சத்துணவு வாங்குவதற்கான இ-டெண்டரை ரத்து செய்வதற்கான கோப்புக்கும் கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் பட்ஜெட் உரையில் கூறியிருப்பது போல் மாற்றி வடிவமைக்கப்பட்டதை கவனத்தில் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக பிரதமரின் சுகாதார திட்டத்தை செயல்படுத்துவது உள்பட 32 கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News