தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ 11

அதிரடி அம்சங்களுடன் புதிய சியோமி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2020-12-30 06:31 GMT   |   Update On 2020-12-30 06:31 GMT
ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 108MP பிரைமரி கேமராவுடன் சியோமி நிறுவனத்தின் எம்ஐ11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.


சியோமி நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம்  செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் 6.81 இன்ச் E4 AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், லிக்விட் கூல் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.

இத்துடன் 8 ஜிபி ரேம், 128 / 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெலிபோட்டோ மேக்ரோ லென்ஸ், 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 



புதிய சியோமி எம்ஐ 11 ஸ்மார்ட்போன் டூயல் சிம் ஸ்லாட், MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1,  4600 எம்ஏஹெச் பேட்டரி, 55 வாட் பிளாஷ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன் மிட்நைட் கிரே, ஹாரிசான் புளூ மற்றும் பிராஸ்ட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 3999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 44,970 என துவங்குகிறது. 
Tags:    

Similar News