செய்திகள்
வெள்ளை மயில்

திருப்பூரில் வெள்ளை மயில்கள்-மக்கள் வியப்பு

Published On 2021-06-10 08:14 GMT   |   Update On 2021-06-10 09:32 GMT
கோவில்வழி பகுதியில்2 மயில்கள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன.அதனை அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் நகர எல்லையில் விவசாய நிலங்கள் உள்ள கோவில்வழி, செட்டிபாளையம், முதலிபாளையம்,முத்தணம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் கோவில்வழி பகுதியில்2 மயில்கள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன. அதனை அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து பறவை ஆர்வலர்கள் கூறியதாவது:-

மயில்கள் அதன் இயல்பான நிறம் இன்றி வெள்ளையாக காட்சியளிப்பதற்கு அதன் மரபணுவில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணமாக இருக்கும். மேலும் தற்போது நகர பகுதியில் நுழையும் மயில்கள் இயற்கையான தானியங்கள் தவிர வேறுவிதமான உணவு வகைகளை உட்கொள்வதால் கூட இது போல் உடல் நிறத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றனர்.

பொதுமக்கள் கூறுகையில்,வெள்ளை நிறத்தில் சுற்றித்திரிந்த மயில்கள் ஆச்சரியமளிக்கிறது. நீல நிறத்தில் மயில்களை பார்த்து பழக்கப்பட்ட நமக்கு இது வித்தியாசம் தான். இது போன்ற மயில்களை வனத்துறையினர் தனி கவனம் எடுத்து பராமரிக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News