செய்திகள்
சச்சின் சாவந்த்

சந்திராப்பூர் மதுவிலக்கு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2021-05-31 02:14 GMT   |   Update On 2021-05-31 02:14 GMT
சந்திராப்பூர் மாவட்டத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த வியாழக்கிழமை மகாவிகாஸ் அகாடி அரசு சந்திராப்பூரில் மதுவிலக்கை திரும்பபெற்றது.
மும்பை :

சந்திராப்பூர் மாவட்டத்தில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த வியாழக்கிழமை மகாவிகாஸ் அகாடி அரசு சந்திராப்பூரில் மதுவிலக்கை திரும்பபெற்றது.

இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ‘‘மதுவிலக்கை ரத்து செய்த சிவசேனா தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசின் முடிவு துரதிருஷ்டவசமானது. இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சி, சந்திராப்பூர் மதுவிலக்கு விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் போடுவதாக கூறியுள்ளது.

இது குறித்து மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘‘பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, சந்திராப்பூரில் மதுவிலக்கை நீக்க ஆதரவாக பட்னாவிஸ் பேசினார். பா.ஜனதாவின் இரட்டை வேடம் இதன் மூலம் அம்பலமாகி உள்ளது. அரசியலுக்காக அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பல்டி அடிப்பார்கள். சட்டசபையில் பட்னாவிஸ் சந்திராப்பூரில் மது விற்பனைக்கான ரேட்கார்டு தன்னிடம் இருப்பதாகவும், அங்கு சட்டவிரோத விற்பனையை தடுக்க மதுவிலக்கை ரத்து செய்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்’’ என்றார்.
Tags:    

Similar News