செய்திகள்
கோப்பு படம்.

மும்பை விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு திட்டம்- பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2020-11-04 08:23 GMT   |   Update On 2020-11-04 08:23 GMT
வருகிற டிசம்பர் 26-ந்தேதி மும்பை விமான நிலையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மும்பை விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. 
அதில் வருகிற டிசம்பர் 26-ந்தேதி மும்பை விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாத அமைப்புகள் தாக்க திட்டமிட்டுள்ளதாக என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது. தகவலை தொடர்ந்து பாதுகாப்பு ஏஜென்சிகள் மும்பை விமான நிலையத்துக்கு அதிகபட்ச எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது. 

அதில் டிசம்பர் 26-ந்தேதி மும்பை விமானநிலையத்தில் சில பயங்கரவாத அமைப்புகளால் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலை அடுத்து தற்போது மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது அவசியம் ஆகும்.

பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த 22 நபர்களை தேர்வு செய்துள்ளதாக அறிந்துள்ளோம். இந்த தாக்குதலுக்கான ஒருங்கிணைப்பு மற்றும் ஒவ்வொரு செயலுக்கும் ரூ.20 லட்சம் வெகுமதி என்று பயங்கரவாத அமைப்புகளால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. 
இந்த எச்சரிக்கை சி.ஐ.எஸ்.எப்., மும்பை போலீஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இதையடுத்து சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் கடுமையான சோதனை கட்டுப்பாடுகள், பயணிகள் மற்றும் உடமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.
முனைய கட்டிடம், வான்வெளி, அனைத்து செயல்பாட்டு பகுதி மற்றும் பிற விமான நுழைவு வாயில்களை ஒழுங்குபடுத்தவும் கடுமையான சோதனைகளை செய்திட உறுதிபடுத்தவும், பாதுகாப்பை உன்னிப்பாக கவனிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News