தொழில்நுட்பம்
ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 லிமிட்டெட் எடிஷன்

ஒன்பிளஸ் 8டி ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

Published On 2020-11-03 04:26 GMT   |   Update On 2020-11-03 04:26 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.


ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சைபர்பண்க் 2077 ஆர்பிஜி கேமை தழுவி உருவாகி இருக்கும் புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் மிக மெல்லிய வடிவமைப்பு மற்றும் மூன்று வித்தியாச பட்டன்களை கொண்டுள்ளது.

மற்றபடி இதன் அம்சங்கள் ஒன்பிளஸ் 8டி ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று பாகங்கள் உள்ளன. 

ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பின் மேல்புறம் பானரோமிக் விண்டோ, மத்தியில் ஸ்பெஷல் ஸ்னோ ஏஜி கிளாஸ் பினிஷ் மற்றும் கீழ்புறத்தில் போர்ஜ் செய்யப்பட்ட கார்பன் பைபர் டெக்ஸ்ச்சரில் சைபர்பண்க் 2077 பொறிக்கப்பட்டு உள்ளது.   



இந்த ஸ்மார்ட்போனில் விசேஷமாக புதிய சிஸ்டம் சவுண்ட் எபெக்ட்கள், இரண்டு கஸ்டம் பில்ட்டர்கள் நைட் சிட்டி மற்றும் நார்தன் கலிபோர்னியா பெயரில் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பகல் மற்றும் இரவு நேரங்களில் சைபர்பண்க் 2077 கேமினை பிரதிபலிக்கிறது. இதை கொண்டு வீடியோக்களை பதிவு செய்ய முடியும். 

சைபர்பண்க் 2077 ஸ்பெஷல் எடிஷனுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்ட லூமினஸ் மொபைல் போன் கேஸ் வழங்கப்படுகிறது. இதன் மேனுவலில் ஆறு லிமிட்டெட் பேட்ஜ்கள் மற்றும் போஸ்டர் வழங்கப்படுகிறது. 

ஒன்பிளஸ் 8டி சைபர்பண்க் 2077 லிமிட்டெட் எடிஷன் மாடல் 12 ஜிபி + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டில் கிடைக்கிறது. இதன் விலை 3999 யுவான், இந்திய மதிப்பில் ரூ. 44,430 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News