செய்திகள்

சேஸிங்கில் அசத்திய தினேஷ் கார்த்திக்- 6 போட்டிகளில் ஐந்தில் நாட் அவுட்

Published On 2018-05-20 10:02 GMT   |   Update On 2018-05-20 10:02 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சேஸிங் செய்த 6 போட்டிகளில் ஐந்தில் நாட் அவுட்டாக நின்று கேப்டன் தினேஷ் கார்த்திக் அசத்தியுள்ளார். #IPL2018 #KKR
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 54-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.

கிறிஸ் லின் (55), சுனில் நரைன் (29), ராபின் உத்தப்பா (45), தினேஷ் கார்த்திக் ஆகியோரின் ஆட்டம் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 போட்டிகள் முடிவில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது அணியாக பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.



8 வெற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு சேஸிங் மூலம் 6 வெற்றிகள் கிடைத்துள்ளது. இந்த 6 வெற்றியிலும் தினேஷ் கார்த்திக்கின் பங்கு மிக முக்கியமானதாகும்.

இந்த 6 போட்டிகளிலும் ஒரேயொரு முறைதான் அவுட் ஆகியுள்ளார். ஆர்சிபிக்கு எதிராக 35 (29 பந்து), ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 42 (23 பந்து), சிஎஸ்கேவிற்கு எதிராக 45 (18 பந்து), ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 41 (31 பந்து), சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிராக 26 (22 பந்து) ரன்கள் அடித்து நாட்அவுட்டாக இருந்துள்ளார். ஆர்சிபிக்கு எதிராக 10 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
Tags:    

Similar News