லைஃப்ஸ்டைல்
முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்

முறையற்ற மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்கான தீர்வுகள்

Published On 2020-01-18 03:45 GMT   |   Update On 2020-01-18 03:45 GMT
பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத் தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும்.
பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத் தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும்.

இதற்கான தீர்வுகளைப்பற்றி இப்போது பார்ப்போம்.

தீர்வு 1: நல்ல ஆரோக்கியமான, நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை 10, 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தீர்வு 2: உடல் எடையை சீராக்க வேண்டும்.

தீர்வு 3: நாம் உண்ணும் உணவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு, பிராய்லர் கோழி, நூடுல்ஸ், மிகவும் பட்டை தீட்டிய அரிசி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக கம்பு, கேப்பை, சிவப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டுக்கோழி, செக்கில் ஆட்டிய எண்ணெய், பச்சைக்காய்கள், பழங்கள், கீரைகள் போன்ற இயற்கை உணவுக்கு மாறி, அளவான உணவை உண்டுவந்தால், ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

பேரிட்சம்பழம், செவ்வாழை, மாதுளை போன்ற பழங்களில் நல்ல இரும்புச்சத்து உள்ளது. வாழைப்பூ கர்ப்பப்பையை வலுவாக்கும் ஒரு இயற்கை தந்த வரப்பிரசாதம் ஆகும். மேலும், அவரைக்காய், வாழைத்தண்டு போன்ற நார்ச்சத்து உள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். வெள்ளை சக்கரையை தவிர்த்து நாட்டுச்சக்கரை, கருப்பட்டி அல்லது மலைத்தேன் பயன்படுத்துங்கள்.

தீர்வு 4: தினமும் ஒரு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறிது நேரம் விளையாடலாம். உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு அல்ல, ஓடி ஆடி விளையாட வேண்டும். அது மனதையையும் புத்துணர்வாக வைக்கும். எந்த அறுவை சிகிச்சையாக இருந்தாலும், மருத்துவரிடம் ஆலோசித்து மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களில் நீங்கள் பழையபடி உடற்பயிற்சி செய்யலாம். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு பிரச்சனையாகி விடும்.

தீர்வு 5: நல்ல மருத்துவரை அணுகி வேறு ஏதாவது தொற்று போன்ற பிரச்சனைகள் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும்.

பொதுவான, முறையற்ற மாதவிடாய் (irregular menstrual cycle) சுழற்சியின் காரணங்களையும், அவற்றிற்கான தீர்வையும் பார்த்தோம். ஒரு ஆறு மாதம் உங்கள் சுழற்சி ஆரம்பிக்கும் நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுநாள் இடை வெளியில் வருகிறது மற்றும் எவ்வளவு நாட்கள் நீடித்து இருக்கிறது என்று ஆராய்ந்து ,இவை யாவும் ஒவ்வொருவரின் உடல் அமைப்பு மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து கொண்டாலே, தீர்வு எளிதாகி விடும். மேலும், உடல் உபாதைகளை அலட்ச்சியம் செய்யாமல், ஆரம்பத்திலேயே சரி செய்வதால், குழந்தை இன்மை, தொற்று போன்ற பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!
Tags:    

Similar News