செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்.

பூலாங்கிணறு அரசு பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்

Published On 2021-10-24 07:15 GMT   |   Update On 2021-10-24 07:15 GMT
மழைநீர் சேகரிப்பு, அயோடின் உப்பை பயன்படுத்துவதன் அவசியம் பற்றி மாணவ மாணவிகள் பேசினர்.
உடுமலை:

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக கொரோனா விழிப்புணர்வு நாடகம் மற்றும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை கண்ணகி தலைமை வகித்தார். 

நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். பொருளியல் ஆசிரியை தேவிகா வாழ்த்துரை வழங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் சேகர் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விளக்கினார் . 

சரஸ்வதி தியாகராஜா கல்லூரி ஆங்கிலத் துறை மாணவ மாணவிகள் கொரோனா விழிப்புணர்வு பற்றிய விழிப்புணர்வு நாடகம் மற்றும் மௌன நாடகம் நடத்தினர். தூய்மை பாரதம், சுற்றுச்சூழல் தொடர்பான பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

கொரோனா விழிப்புணர்வு மற்றும் மழைநீர் சேகரிப்பு, அயோடின் உப்பை பயன்படுத்துவதன் அவசியம் பற்றி மாணவ மாணவிகள் பேசினர். அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சரஸ்வதி தியாகராஜா கல்லூரி ஆங்கில துறையுடன் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் சமூக இடைவெளியுடன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவி சூர்யா நன்றி கூறினார்.
Tags:    

Similar News