செய்திகள்
மைக் பாம்பியோ

சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானம் தாக்குதல் - மைக் பாம்பியோ கண்டனம்

Published On 2019-09-15 03:19 GMT   |   Update On 2019-09-15 03:19 GMT
சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

சவுதி அரசின் அரம்கோ பெட்ரோல் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமாக நாடு முழுவதும் பல்வேறு சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
 
இந்நிலையில், தலைநகர் ரியாத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்யாக் என்ற இடத்தில் அப்கைக் என்னும் சுத்தகரிப்பு ஆலையின் மீது நேற்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த தொழிற்சாலையின் பெரும்பகுதி தீயில் எரிந்து சேதமடைந்தது.

இதேபோல், குர்அய்ஸ் என்ற பகுதியில் உள்ள அரம்கோ நிறுவனத்தின் பெட்ரோல் கிணறு மீதும் ஆளில்லா விமானம் மூலம் இன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெட்ரோல் கிணற்றின் ஒருபகுதி தீப்பிடித்து எரிந்து, பின்னர் அணைக்கப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது ஆளில்லா விமானத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதேபோல், சவுதி பெட்ரோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்று குவைத் உள்ளிட்டவையும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News