செய்திகள்
கொரோனா தடுப்பூசி, ராஜேஷ் பூசன்

இந்தியாவில் இதுவரை 1.17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதார அமைச்சகம்

Published On 2021-02-23 12:08 GMT   |   Update On 2021-02-23 12:08 GMT
இந்தியாவில் இதுவரை 1.17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகதாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூசன் கொரோனா தொற்று மற்றும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி குறித்து கூறுகையில் ‘‘இந்தியாவில் இதுவரை 1.17 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1.04 கோடி பேருக்கு முதல் டோஸும், 12.61 லட்சம் பேருக்கு 2-வது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.50 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. சராசரி பலி எண்ணிக்கையை பார்த்தீர்கள் என்றால் கடந்த வாரம் 92-க்கு கீழ் இருந்தது. தொடர்ந்து 100-க்கு கீழ் இருந்து வருகிறது. பாசிட்டிவ் சதவீதம் 5.19. தொடர்ந்து நாளுக்குநாள் இது குறைந்து வருகிறது.

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 75 சதவீதம் பேர் இன்னும் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவில் 38 சதவீதம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றன. மகாராஷ்டிரா 37 சதவீதம்’’ என்றார்.
Tags:    

Similar News