ஆன்மிகம்
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது

Published On 2021-08-25 04:21 GMT   |   Update On 2021-08-25 04:21 GMT
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
கோவில்பட்டி இந்து நாடார்உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 9.30 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலை 5.30 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடந்தது.

இன்று(புதன்கிழமை) காலை 7.25 மணிக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 11.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும். மாலை 5.30 மணிக்கு ஐந்தாம்கால யாகசாலை பூஜை நடக்கிறது.

நாளை (வியாழக்கிழமை) காலை 7.35 மணிக்கு விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து 6-ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 9.15 மணிக்கு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்படும். காலை 9.45 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் பத்திரகாளியம்மன் கோவில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காஞ்சீபுரம் தொண்டைமண்டல ஆதீனம் திருசிற்றம்பல ஞானபிரகாச தேசிய பரமாச்சார்ய சுவாமிகள், திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதினம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள், திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாளை காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை தூத்துக்குடி ஆர். செல்வம் பட்டர் குழுவினர் நடத்தி வருகின்றனர்.

நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு மண்டல பூஜை ஆரம்பமாகும்.

கோவில் கும்பாபிஷேகம் ஏற்படுகளை கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், துணை தலைவர் டி.கே.டி.திலகரத்தினம், செயலாளர் எம்.பி.சி.மாணிக்கம், பொருளாளர் டி.ஆர்.சுரேஷ்குமார், கவுரவ ஆலோசகர்கள் எஸ்.எஸ்.டி.சி.ராஜதுரை, எஸ்.எஸ்.டி.கே.கணேஷ்பாபு, என்ஜினீயர் கே.ஜெயபால் மற்றும் உறுப்பினர்கள் செயது வருகிறார்கள்.
Tags:    

Similar News