ஆன்மிகம்
மீனாட்சி அம்மன்

தீபாவளி பண்டிகை அன்று மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் அணிவிப்பு

Published On 2020-11-05 07:53 GMT   |   Update On 2020-11-05 07:53 GMT
தீபாவளி பண்டிகை அன்று காலையில் இருந்து இரவு வரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று அம்மனுக்கு வைர கிரீடமும், சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும். அதே போன்று இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் காலையில் இருந்து இரவு வரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News