செய்திகள்
மழை

இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்

Published On 2021-07-31 07:55 GMT   |   Update On 2021-07-31 10:15 GMT
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்றும் மற்றும் நாளையும் நீலகிரி, கோவை, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


ஆகஸ்ட் 2-ந்தேதி அன்று நீலகிரி, கோலை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஆகஸ்ட் 3, 4-ந்தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிபட்சமாக சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Tags:    

Similar News