செய்திகள்
கோப்புபடம்

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகளை தேடி வரும் காட்டு யானைகள்

Published On 2021-06-09 09:55 GMT   |   Update On 2021-06-09 09:55 GMT
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வனத்துறை சார்பிலும் விவசாயிகளின் விளை நிலங்களில் இருந்தும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகள் மற்றும் கசிவுநீர்க் குட்டைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன.

மேட்டுப்பாளையம்:

வன விலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 18 தண்ணீர் தொட்டிகள், 4 கசிவு நீர்க் குட்டைகள் மற்றும் ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு தடுப்பணைகளும் கட்டப்பட்டு உள்ளன.

வனத்துறை சார்பிலும் விவசாயிகளின் விளை நிலங்களில் இருந்தும் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தொட்டிகள் மற்றும் கசிவுநீர்க் குட்டைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன.

கோவை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின்பேரில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் அறிவுரையின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் பழனிராஜா மேற்பார்வையில் வனத்துறை ஊழியர்கள் தினசரி தண்ணீர் தொட்டிகளை பார்வையிட்டு தேவையான தண்ணீரை தொட்டிகளில் நிரப்பி வருகின்றனர்.

அடர்ந்த வனப்பகுதியில் காலை முதல் மாலை வரை உணவு மற்றும் நீர்நிலைகளைத் தேடியலையும் காட்டுயானைகள் மாலைநேரத்தில் வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியை தேடி வருகின்றன. ஒரு சில நேரங்களில் ஒன்றிரண்டு யானைகள் தன்னந்தனியாக வந்து தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்து தாகம் தீர்த்துக்கொள்கின்றன.

யானைகள் ஆசைதீர தொட்டியில் உள்ள தண்ணீரைக் குடித்த பின்னர் மெல்ல மெல்ல ஆடி அசைந்தபடி வனப்பகுதிக்குள் சென்று மறையும் காட்சி காண கண் கொள்ளா காட்சியாக அமைகிறது. 


Tags:    

Similar News