செய்திகள்
கோத்தபய ராஜபக்சே

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அறிவிப்புக்கு தமிழ் புலம்பெயர் குழு வரவேற்பு

Published On 2021-09-23 02:22 GMT   |   Update On 2021-09-23 02:22 GMT
அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும்
கொழும்பு :

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழ் வம்சாவளியினருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, விடுதலைப்புலிகளுடன் தொடர்பில் இருந்ததற்காக கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்க தயங்க மாட்டேன் என்றும் ஐ.நா., பொதுச்செயலாளரிடம் கோத்தபய ராஜபக்சே கூறினார்.

இந்த நிலையில் உலகின் முக்கிய தமிழ் சிறுபான்மை புலம்பெயர் குழுவாக கருத்தப்படும் உலகளாவிய தமிழ் மன்றம் (ஜி.டி.எப்) அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இந்த நல்லிணக்க பேச்சுவார்த்தை அறிவிப்பை வரவேற்றுள்ளது.

இது குறித்து அந்த மன்றத்தின் செய்தி தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ அதிபர் கோத்தபய ராஜபக்சே தமிழ் புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை ஆகும். நாங்கள் அதை வரவேற்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News