செய்திகள்
கைது

ராமாபுரம் அருகே கஞ்சா விற்பனை - ரவுடி கூட்டாளியுடன் கைது

Published On 2019-11-10 09:52 GMT   |   Update On 2019-11-10 09:52 GMT
ராமாபுரம் அருகே கஞ்சா விற்ற ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

ராமாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வளசரவாக்கம் உதவி கமி‌ஷனர் மகிமை வீரனுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து ராயலாநகர் இன்ஸ்பெக்டர் தாம்சன் ஜார்ஜ் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுட்டனர். இந்த நிலையில் மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ராமாபுரம் ஆண்டவர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (28) மற்றும் கூட்டாளியான ராயலா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பது தெரிந்தது.

அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சா ரூ.2,300 பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு வேலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட ரவுடி வரதன் என்பவனை கோர்ட்டு வளாகத்தில் வைத்து சுரேஷ் வெட்டிக்கொலை செய்த வழக்கு உள்ளது.

மேலும் ராமாபுரம், வளசரவாக்கம், எம்ஜிஆர் நகர், ஜெ.ஜெ நகர், கே.கே. நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. 2013-ம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டு இருந்தான்.

கடந்த மாதம் 24-ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்த சுரேஷ் கூட்டாளி பாஸ்கரனுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு மீண்டும் போலீசில் சிக்கியுள்ளான்.

Tags:    

Similar News