செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் பழனிசாமி

Published On 2020-01-11 08:38 GMT   |   Update On 2020-01-11 08:38 GMT
பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 24 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயகாந்த், விக்கிரவாண்டி வட்டம், சாமியாடிகுச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

செஞ்சி வட்டம் சேரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன், வேலூர் மாவட்டம் பலவன்சாத்து கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், பெருகமணி கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்த சிறுவன் அஸ்வின் குமார் ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தனர்.

சென்னை பெரம்பூர் வட்டம், வியாசர்பாடியைச் சேர்ந்த முருகன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவள்ளுர் மாவட்டம், அம்மையார்குப்பம் குமரன், ராணிப்பேட்டை மாவட்டம் ரெட்டிவலம் கமலா, நெமிலி வட்டம், மானாமதுரை கிராமத்தைச் சேர்ந்த சேகர்.

வாலாசா வட்டம், தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரேம் குமார் சாணார்பெண்டை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன்.

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பெருமாளகரம் கிராமத்தைச் சேர்ந்த நாடிமுத்து.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், பேச்சிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ், சஜின் சலோ, மன்மோகன் ஆகிய 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த சம்பத். வேலூர் மாவட்டம், திருவலம் கூட்ரோடு மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மதன்குமார்,

நாகப்பட்டினம் பிராந்தியங்கரை கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், புதுக்கோட்டை மாவட்டம், காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்த அய்யப்பன், சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் ஆகிய 3 பேர் மின்சாரம் தாக்கி இறந்தனர்.

ஈரோடு மாவட்டம், நஞ்சனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கல்கிணற்றுவலசை கிராமத்தைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் மின்சாரம் தாக்கி இறந்தார்.

விருதுநகர் மாவட்டம், மேலராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி ஆகியோர் பாம்பு கடித்து உயிரிழந்தனர்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த 24 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News