செய்திகள்
பென் ஸ்டோக்ஸ்

பந்தை பளபளப்பாக்க உமிழ் நீரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்: சானிடைசரால் சுத்தம் செய்த நடுவர்

Published On 2021-02-25 10:11 GMT   |   Update On 2021-02-25 10:11 GMT
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தை பளபளப்பாக உமிழ் நீரை பயன்படுத்த, நடுவர் சானிடைசரால் சுத்தம் செய்து எச்சரிக்கை விடுத்தார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி  கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 112 ரன்னில் சுருண்டது. 

பின்னர் இந்தியா பேட்டிங் செய்தது. 12-வது ஓவரின்போது பென் ஸ்டோக்ஸ் கையில் பந்து சென்றது. அவரை பந்தை பளபளப்பாக தவறுதலாக உமிழ் நீரை பயன்படுத்தினார். இது கேமராவில் பதிவானது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் பந்தை பளபளப்பாக உமிழ்நீரை பயன்படுத்தக் கூடாது என ஐசிசி தெரிவித்துள்ளது. வியர்வையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பென் ஸ்டோக்ஸ் தற்செயலாக உமிழ் நீரை பயன்படுத்தியதால், நடுவர் பந்தை சானிடைசரால் சுத்தம் செய்தார். மேலும், நட்பாக எச்சரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News