ஆன்மிகம்
தீமிதி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.

சீர்காழி கோமளாம்பிகை கோவில் தீமிதி திருவிழா

Published On 2021-03-13 05:05 GMT   |   Update On 2021-03-13 05:05 GMT
சீர்காழி கீழ வீதியில் கோமளாம்பிகை என்னும் காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் மாலை காளியாட்டத்துடன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சீர்காழி கீழ வீதியில் கோமளாம்பிகை என்னும் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 5-ந் தேதி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடங்கள் எடுத்தும், அலகு காவடிகள், கரகம் எடுத்தும் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையோடு ஊர்வலமாக பிடாரி கீழவீதி, தேர் வடக்கு வீதி, தேர் மேல வீதி, தெற்கு வீதி, பழைய பஸ் நிலையம் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து மாலை காளியாட்டத்துடன் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இரவு அம்மன் முத்துப்பல்லக்கில் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News