செய்திகள்
தலீபான் பயங்கரவாதிகள் சரண்

ஆப்கானிஸ்தான் படைகளிடம் 41 தலீபான் பயங்கரவாதிகள் சரண்

Published On 2019-09-14 22:54 GMT   |   Update On 2019-09-14 22:54 GMT
வார்சாஜ் மாவட்டத்தில் 41 தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து 19-வது ஆண்டாக தலீபான் பயங்கரவாதிகள், உள்நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த போரினால் பலத்த உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இன்னொரு பக்கம், தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதங்களை கைவிடவும், அரசுக்கு எதிரான போர்க்குணத்தை கைவிடவும், 2010-ம் ஆண்டு சமாதானம், நல்லிணக்க செயல்முறையை ஆப்கானிஸ்தான் அரசு தொடங்கியது.

அதன்பின்னர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு நல்லிணக்க செயல்முறையில் இணைந்தனர்.

இந்த நிலையில், டாக்கார் மாகாணத்தின், வார்சாஜ் மாவட்டத்தில் 41 தலீபான் பயங்கரவாதிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உள்ளூர் பெரியவர்கள் மற்றும் போலீஸ் படையினர் எடுத்த முயற்சியின் பலனாக 41 தலீபான் உறுப்பினர்கள் ஆப்கான் தேசிய மற்றும் பாதுகாப்பு படைகளிடம் வார்சாஜ் மாவட்டத்தில் சரண் அடைந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News